அந்திக்கிறிஸ்து யார், அவர் எங்கிருந்து வருவார்?
இந்த உலகத்தின் முடிவிற்கு சற்று முன்பு, ஒரு சக்திவாய்ந்த ராஜ்ஜியம் எழும்பி, எழுச்சி பெற்று முழு உலகத்தையும் கட்டுப்படுத்தும் என்று பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்கள் கணித்துள்ளது.
மேலும், இந்த ராஜ்ஜியம் தொடங்கி, வளரும் சரியான தேதியை ஒரு தீர்க்கதரிசனம் வெளிப்படுத்துகிறது. அதன்படி, பழைய பாபிலோன் ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்த பிறகு, சரியாக இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய உலகத் தலைவர் தோன்றுவார் என்று கூறுகிறது .
திரையில் காணும் இந்த பழங்கால கற்பலகை, பாபிலோனைப் பாதுகாத்துக்கொண்டிருந்த கடைசி கோட்டை வீழ்ந்த சரியான தேதியை குறிப்பிடுகிறது. தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், அது 1982 ம் ஆண்டின் அக்டோபர் 1 ம் தேதியை குறிக்கிறது. அன்று தோன்றிய உலக தலைவர் யார், அவர் என்ன செய்தார்?
வெளிப்படுத்தின விஷேஷ புத்தகத்தில், உலகத்தின் முடிவில் உலகைக் கட்டுப்படுத்தும் இரண்டு மனிதர்களைப் பற்றிய விளக்கத்தைக் காண்கிறோம்.
முதல் மனிதன் முழு உலகத்தையும் ஆளுகை செய்யும் ஒரு உலக தலைவராக இருப்பான், அவன் போர் செய்து உலகம் முழுவதையும் கட்டுப்படுத்துவான்.
இரண்டாவது மனிதன் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி, இந்தக் கள்ள தீர்க்கதரிசி அற்புதங்களைச் செய்வான் மற்றும் மிருகத்தின் அடையாளத்தைத் தரித்துக்கொள்ள அனைவரையும் கட்டாயப்படுத்துவான்.
இந்த இருவரில் ஒருவர் அந்திக்கிறிஸ்துவா?
முதல் நூற்றாண்டு காலத்திலேயே பல அந்திக்கிறிஸ்துகள் இருந்ததாக பரிசுத்த வேதாகமம் சொல்கிறது, மேலும் அது “அந்திகிறிஸ்து வருகிறார்”என்றும் கூறுகிறது. அதற்கான தடயங்களும் இருக்கிறது
அந்திக்கிறிஸ்து என்ற வார்த்தை இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது: அந்தி மற்றும் கிறிஸ்து
ஆங்கில வேதாகமத்தில் ஆன்டி க்ரைஸ்ட் என்பது தமிழில் அந்திக்கிறிஸ்து என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அந்திக்கிறிஸ்து என்ற வார்த்தையை நாம் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்று எடுத்துக்கொள்ளலாம் .
கிறிஸ்து என்பது அபிஷேகம் செய்யப்பட்டவர் என்று பொருள்படும், மேலும் இந்த வார்த்தை இயேசு கிறிஸ்து அல்லது ராஜா அல்லது போதகராக, ஆசாரியராக அபிஷேகம் செய்யப்பட்ட வேறு ஒருவரைக் குறிக்கலாம்.
முழு உலகத்தையும் ஆளுகை செய்யப்போகும் தலைவனும் , கள்ளத்தீர்க்கதரிசியும் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள்
இந்த கள்ளத் தீர்க்கதரிசி, அந்த உலக தலைவனை, தேவனை வணங்குவது போல வணங்கும்படி மக்களை வழிநடத்துவான். ஹிட்லர் தன்னை ஜெர்மனியின் மீட்பராகப் பார்த்தது போல், உலகை இரட்சிக்க வந்த கிறிஸ்துவுக்கு மாற்றாக இந்த உலக தலைவன் செயல்படுவாரன்.
மக்கள் அந்திக்கிறிஸ்துவைப் பற்றி பேசும்போது, அவர்கள் பொதுவாக உலகை ஆளும் இந்த மனிதனைப் பற்றி சிந்திக்கிறார்கள்.
இந்த உலக தலைவன் எங்கிருந்து வருவார், எப்போது தோன்றுவார்?
எரேமியா 50-ம் அதிகாரத்தில் இந்த உலக தலைவனின் அடையாளத்தைப் பற்றிய ஒரு குறிப்பைக் காண்கிறோம். இந்த தீர்க்கதரிசனத்தில், உலகத்தின் முடிவில் உலகை ஆளும் மனிதன் “பாபிலோனின் ராஜாவான நேபுகாத்நேச்சார்” என்று அழைக்கப்படுகிறான்.
நேபுகாத்நேசர் இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு பாபிலோனின் ராஜாவாக இருந்தார், அந்த நேரத்தில் பாபிலோன், உலகம் கண்டிராத சக்திவாய்ந்த ராஜ்யமாக இருந்தது. ஆனால் நேபுகாத்நேச்சார் இறந்த சில வருடங்களுக்குப் பிறகு, பாபிலோன் நகரம் கைவிடப்பட்டு காணாமல் போனது.
பரிசுத்த வேதாகமம், நேபுகாத்நேச்சரையும் அவனது பாபிலோனிய ராஜ்யத்தையும், உலகத்தின் முடிவில் உலகைக் கட்டுப்படுத்தும் மற்றொரு தலைவருக்கும் ராஜ்யத்திற்கும் அடையாளங்கள் அல்லது உருவகங்களாகப் பயன்படுத்துகிறது.
வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் இந்த கடைசிக்கால “பாபிலோன்” பற்றிய விளக்கத்தை நாம் காண்கிறோம், இது உலகத்தின் முடிவில் “பூமியின் ராஜாக்கள் மீது” ஆட்சி செய்யும்.
இந்த “பாபிலோன்” அரசியல், பொருளாதார மற்றும் மத சக்தியைக் குறிக்கிறது, அது இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்பே உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது.
நேபுகாத்நேச்சார் ராஜா பாபிலோனை ஆண்டதைப் போலவே, மற்றொரு சக்திவாய்ந்த தலைவர் கடைசி கால பாபிலோனை ஆளுகை செய்வார்.
கடைசிக்கால பாபிலோன் எங்கு இருக்கும் என்றும் அது எப்போது தோன்றும் என்பதை சரியாக புரிந்து கொள்ள, தானியேல் புத்தகத்தில் உள்ள ஒரு தீர்க்கதரிசனத்திற்கு நாம் திரும்பலாம்.
பூர்வ பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனத்தை தானியேல் 4ஆம் அதிகாரம் விவரிக்கிறது. உலகில் உள்ள அனைத்து பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு நிழலையும் உணவையும் வழங்கும் உயரமான மரத்தைக் குறித்து அவர் சொப்பனம் கண்டார். பின்னர் அந்த மரம் வெட்டப்பட்டு, இரும்பு மற்றும் வெண்கலத்தால் ஆன ஒரு விலங்கு வெட்டப்பட்ட போடப்பட்டது.
நேபுகாத்நேச்சார் ராஜா தானியேலிடம் தான் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்தும்படி கேட்டபோது, தானியேல், தனது இருதயம் மனுஷ இருதயமாயிராமல், மிருக இருதயம் கொடுக்கப்பட்ட ராஜாவைக் குறிக்கிறது என்று விளக்கினான். ஆனால் ஏழு வருடங்களுக்குப் பிறகு, ராஜா மீண்டும் மனுஷ இருதயம் பெறுவார் என்றும் மீண்டும் பாபிலோனை ஆட்சி செய்வான் என்றும் கூறுகிறார் .
தானியேல் விளக்கியதைப் போலவே, ஒரு வருடம் கழித்து இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறியது என்று தானியேல் 4: 29 விளக்குகிறது. நேபுகாத்நேச்சார் ராஜா சிறிது காலத்திற்கு பிறகு தனது மனுஷ இருதயத்தை இழந்து, ஏழு வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ராஜ்யத்தின் மீது ஆட்சி செய்யத் திரும்பினார்.
இப்போது மேலோட்டமாகப் பார்த்தால், இந்தத் தீர்க்கதரிசனம் நேபுகாத்நேச்சார் அரசனைப் பற்றியதாகத் தெரிகிறது. ஆனால் உண்மையில், பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பல தீர்க்கதரிசனங்கள் இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளை முன்னறிவிக்கிறது. தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றமானது, இரண்டாவது, பெரிய நிறைவேற்றத்தைப் பற்றிய தகவல்களை வழங்கும் ஒரு முன்னறிவிப்பு மட்டுமே.
எனவே சொப்பனத்தின் முதல் நிறைவேற்றமானது, இரண்டாவது நிறைவேற்றத்தைப் புரிந்துகொள்ள வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம்.
முதல் நிறைவேற்றத்தில், மரம் நேபுகாத்நேச்சரைக் குறிக்கிறது.
இரண்டாவது நிறைவேற்றத்தில், மரம் மற்றொரு ஆட்சியாளரைக் குறிக்கலாம் அல்லது அது பாபிலோன் ராஜ்யத்தை பிரதிநிதித்துவப்படுத்தலாம், ஏனென்றால் பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசனத்தில், ராஜா பெரும்பாலும் தனது ராஜ்யத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
முதல் நிறைவேற்றத்தில், பாபிலோன் ஏழு வருடங்கள் ஆட்சியாளர் இல்லாமல் இருந்தது. அது போலவே இரண்டாவது நிறைவேற்றத்தில், பாபிலோன் ஏழு வருடங்கள் ஆட்சியாளர் இல்லாமல் இருக்கும்.
“ஏழு ” என்றால் என்ன?
வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் உள்ள இரண்டு வேதவசனங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் நாம் பதிலைக் காணலாம்.
வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் 12:14, “ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாக” என்று விவரிக்கப்பட்ட மூன்றரை வருடங்களைக் குறிக்கிறது.
அடுத்து, வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தில் 11:3 ஐப் பாருங்கள், அதே காலகட்டம் ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் என குறிப்பிடுகிறது
ஆக மூன்றரை வருடங்கள் என்பது ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்களுக்குச் சமம் என்று பார்க்கலாம்.
இப்போது, 3 ½ வருடங்கள் என்பதை இரட்டிப்பாக்கினால், 7 வருடங்கள் வருகிறது. இதை அப்படியே நாட்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கினால், இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபது நாட்கள் வருகிறது.
எனவே, தானியேல் 4ஆம் அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசனத்திற்குத் திரும்பிச் சென்றால், முதல் நிறைவேற்றத்தில், பாபிலோன் இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபது நாட்களுக்கு, அதாவது சுமார் 7 வருடங்கள் ஆட்சியாளர் இல்லாமல் இருந்தது.
இரண்டாவது நிறைவேற்றத்தில், பாபிலோன் இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபது நாட்களுக்கு மீண்டும் ஆட்சியாளர் இல்லாமல் இருக்கும்.
பரிசுத்த வேதாகம தீர்க்கதரிசனங்களில், ஒரு நாள் ஒரு வருடத்தைக் குறிக்கிறது. உதாரணமாக, எசேக்கியேல் 4 - ம் அதிகாரம் , 6 - ம் வசனப்படி, தீர்க்கதரிசி எசேக்கியேல் தனது வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களுக்கு படுத்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டதைக் காண்கிறோம், ஒவ்வொரு நாளும் ஒரு வருடத்தை குறிக்கும்.
ஒரு நாள் ஒரு வருடத்தைக் குறிக்கிறது என்றால், தானியேல் 4-ல் உள்ள தீர்க்கதரிசனத்தின் இரண்டாவது நிறைவேற்றத்தில், பாபிலோன் 2520 ஆண்டுகளுக்கு ஆட்சியாளர் இல்லாமல் இருக்க முடியும்.
எனவே இந்த தீர்க்கதரிசனம், பாபிலோன் ராஜ்யமாகிய மரம் வெட்டப்பட்டு இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபது ஆண்டுகளுக்கு ஆட்சியாளர் இல்லாமல் இருக்கும் என்று கணிக்கலாம்.
அதன் பிறகு, வெண்கலம் மற்றும் இரும்பின் விலங்கு அகற்றப்பட்டு, பாபிலோன் மீண்டும் வளரத் தொடங்கி இறுதியில் உலகை ஆளும் வரை ஒரு புதிய ஆட்சியாளர் நியமிக்கப்படுவார்,
எனவே, பாபிலோன் எப்போது கைப்பற்றப்பட்டு அதன் தலைவரை இழந்தது என்பதை நாம் கண்டுபிடித்தால், புதிய தலைவர் நியமிக்கப்படுவதையும் , பாபிலோன் மீண்டும் எழுச்சி பெரும் நாளை சரியாக கணக்கிடலாம்
தானியேல் 4- ம் அதிகாரத்தில் நேபுகாத்நேசரின் சொப்பனத்திற்கு பிறகு, அடுத்த அதிகாரத்தில் பாபிலோனியப் பேரரசின் வீழ்ச்சியை விவரிப்பதை நாம் கவனிக்கவேண்டும். .
தானியேல் 5 : 25 - ல், பாபிலோனின் ஆட்சியாளர்கள் விருந்து கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கை தோன்றி சுவரில் ஒரு செய்தியை எழுதியதைக் காண்கிறோம். ராஜாவும் அவரது விருந்தினர்களும் பயந்தார்கள், அவர்களால் செய்தியைப் படிக்க முடியவில்லை. அதனால், சுவரில் இருந்த கையெழுத்தைப் படித்து விளக்கமளிக்க ராஜா தானியேலை அழைத்தார்.
அந்த செய்தி என்னவென்றால்: “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்” என்பதாகும்
சுவரில் உள்ள எழுத்தின்படி, பாபிலோன் ராஜ்யம் முடிந்துவிட்டது என்றும், கர்த்தர் அதை மேதியருக்கும் பெர்சியர்களுக்கும் கொடுத்தார் என்றும் தானியேல் விளக்கினார்.
ஆனால் இந்த எழுத்தில் இரண்டாவது, எண்ணியல் செய்தியும் மறைந்திருந்தது.
Foot Note என்ற அடிக்குறிப்புகளுடன் கூடிய வேதாகமம் உங்களிடம் இருந்தால், இந்த வார்த்தைகள் பணத்தின் அலகுகளாக விளக்கப்படுவதை நீங்கள் பார்க்கலாம். “மெனே” என்பது தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்று பொருள்படும் அதே நிலையில், மெனே என்பது எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரு மினா என்றும், இந்த ஒரு மினா என்பது 50 சேக்கல் எனவும் பொருள்படுகிறது. அதுபோலவே, தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்று பொருள்படும் அதே வேளையில், எண்ணிக்கை அளவீட்டில் ஒரு சேக்கல் எனவும் பொருள்படுகிறது. “பார்சின்” என்பது “பிரிக்கப்பட்ட” அல்லது “பாதி” என்று பொருள்படக்கூடிய அரை மினாவைக் குறிக்கிற 25 சேக்கல் ஆகும்.
இவற்றைக் கூட்டினால், நூற்று இருபத்தாறு சேக்கல் கிடைக்கும்
யாத்திராகமம், 30 ம் அதிகாரம் , 13 ம் வசனத்தின்படி, ஒரு சேக்கல் என்பது 20 கேரா அளவுகளைக்கொண்டது ஆகும் .
நூற்று இருபத்தாறு சேக்கல்களை 20 ஆல் பெருக்கினால், 2520 கெராக்கள் கிடைக்கும்.
தானியேல் 4ஆம் அதிகாரத்தில் மறைந்திருக்கும் அதே எண்ணையே நாம் கண்டறிந்தோம். பாபிலோன் மீண்டும் எழுச்சிபெறத் தொடங்குவதற்கு இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபது ஆண்டுகள் கடந்துவிடும் என்பதற்கு இது இரண்டாவது உறுதிப்படுத்தல்.
பாபிலோனின் ஆட்சியாளர்கள் விருந்து கொண்டாடிக்கொண்டிருந்தபோது, மேதியர்களும் பெர்சியர்களும் ஏற்கனவே ராஜ்யத்தைக் கைப்பற்றியிருந்தனர், அவர்கள் அன்றிரவே பாபிலோன் நகரத்தை ஆக்கிரமித்தனர்.
கிமு 556 - இல் வீழ்ச்சியடைந்த பாபிலோனின் கடைசி ராஜாவாகிய நபோனிடஸ் என்பவனுடைய சரித்திரத்தில் “பதிநான்காம் நாளில் சிப்பர் பட்டணம் போரின்றி கைப்பற்றப்பட்டது எனவும், அதனால் நபோனிடஸ் ராஜா தப்பி ஓடிவிட்டார் என்றும் குறிப்பிடுகிறது. பதினாறாம் நாளில், குட்டியாவின் ஆளுநரான உக்பாருவும், சைரஸின் படையும் போரின்றி பாபிலோனுக்குள் நுழைந்தனர்.
கிமு 539 இல் பாபிலோனிய மாதமான திஷ்ரிதம் மாதம், 14 வது நாளில் சிப்பர் பட்டணம் கைப்பற்றப்பட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, பாபிலோன் ஏற்கனவே மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் கொடுக்கப்பட்டதாகத் தானியேல் பாபிலோனின் ஆட்சியாளர்களிடம் கூறினார், அன்றிரவே பாபிலோன் நகரமும் வீழ்ந்தது. எனவே, ஒரு பழங்கால களிமண் பலகையில் இருந்து, பாபிலோன், ஆட்சியாளர் இல்லாமல் இருந்த இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபது ஆண்டு காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் சரியான தேதியை நாம் பெற்றுள்ளோம்.
பரிசுத்த வேதாகமத்தில், தீர்க்கதரிசனத்தின் தேதிகள் எப்போதும் எபிரேய நாட்காட்டியைப் பயன்படுத்துகின்றன. பாபிலோனிய நாட்காட்டியில் உள்ள திஷ்ரிடும் மாதம் ஹீப்ரு நாட்காட்டியில் உள்ள திஷ்ரி மாதத்திற்கு சமம்.
எனவே சிப்பார் நகரம் கிமு 539 திஷ்ரியின் 14 நாளில் வீழ்ந்தது. பாபிலோன் ராஜ்யம் ஏற்கனவே இருந்ததாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, மேதியர்களுக்கும் பாரசீகர்களுக்கும் வழங்கப்பட்டது எனவும் தானியேல் கூறினார். எனவே கி.மு. 539 திஷ்ரியின் 14வது நாளிலிருந்து நமது எண்ணிக்கையைத் தொடங்குவோம்.
இரண்டாயிரத்து ஐந்நூற்று இருபது வருடங்களைக் கூட்டினால், தற்போதைய நமது நாட்காட்டியின்படி 1982ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி என்பது திஷ்ரியின் 14ஆம் நாளுக்கு சமாகிறது .
அதே நாளில், ஹெல்முட் கோல் என்பவர், தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படாமல், ஜேர்மன் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிறகு புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜேர்மனியின் வரலாற்றில் ஒரு தலைவர் இவ்வாறு ஆட்சிக்கு வந்த ஒரே முறை இதுவே.
1982 ம் ஆண்டு அக்டோபர் 1 ம் தேதி அன்று ஹெல்முட் கோல் திடீரென, அதிகாரத்திற்கு வந்தது, தானியேல் 4 அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசனத்தின் இரண்டாவது நிறைவேற்றமாக இருக்கிறது .
இப்போது , பின்வரும் 3 கருத்துகளின் அடிப்படையில் நாம் ஒரு முடிவுக்கு வரலாம்
கருத்து 1. ஹெல்முட் கோல் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் கழிந்த பிறகு, முன்னதாக ஆட்சிக்கு வந்த அதே நாளில், அவரது தலைமையில் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி மீண்டும் இணைக்கப்பட்டது. அது அக்டோபர் 3, 1990, எபிரேய நாட்காட்டியின் திஷ்ரி 14 ம் நாள் ஆகும்.
கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி ஏன் முதலில் பிரிக்கப்பட்டது தெரியுமா?
முதல் உலகப் போரில் ஜெர்மனியும் அதன் நட்பு நாடுகளும் ஐரோப்பாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றின. மீண்டும், இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் ஜெர்மனியை ஐரோப்பாவின் பெரும்பகுதியைக் கைப்பற்ற வழிவகுத்தார். இந்த இரண்டு போர்களுக்குப் பிறகு, ஜெர்மனி மீண்டும் ஐரோப்பாவை ஆளுவதை மற்ற உலக வல்லரசுகள் விரும்பவில்லை. அவர்கள் ஜெர்மனியைப் பிரித்து, அதன் இராணுவத்தை அகற்றி, அதன் பல தொழிற்சாலைகளை அழித்தார்கள்.
1990 இல், பாபிலோன் மீண்டும் வளர ஆரம்பிக்கும் என்று பரிசுத்த வேதாகமம் முன்னறிவித்த சரியான நாளில் ஆட்சிக்கு வந்த ஹெல்முட் கோல் என்ற மனிதனால் ஜெர்மனி மீண்டும் இணைக்கப்பட்டது.
கருத்து 2. ஹெல்முட் கோல் கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா நாடுகளை ஒரு உலக வல்லரசாக ஒன்றிணைப்பதற்கு முன்னணி தலைவராக இருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தை நிறுவி, யூரோவை ஐரோப்பாவின் பொது நாணயமாக நிறுவி, கிழக்கு ஐரோப்பாவின் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான வழியைத் திறந்துவிட்ட ஒப்பந்தத்தை எழுதிய இருவரில் ஹெல்முட் கோல் என்ற இவரும் ஒருவர்.
தானியேல் 4 - ம் அதிகாரத்தில் உள்ள தீர்க்கதரிசனம், பாபிலோனின் அடி மரத்தைச் சுற்றியுள்ள விலங்கு அகற்றப்படும்போது, அதே வேர்களில் இருந்து ஒரு புதிய மரம் வளரத் தொடங்கும் என்று கூறுகிறது. இந்த வரலாற்றை நாம் பார்க்கும்போது, ஐரோப்பாவின் வேர்கள் ரோமாபுரி, கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் இறுதியில் பாபிலோனுக்குச் செல்வதை காணலாம் .
பரிசுத்த வேதாகமத்தில், கடைசி கால பாபிலோன் ஒரு மிருகத்தின் மீது சவாரி செய்யும் ஒரு பெண்ணாக விவரிக்கப்பட்டுள்ளது. சில யூரோ நாணயங்களின் பின்பக்கத்தில் ஒரு மிருகத்தின் மீது சவாரி செய்யும் பெண்ணின் படத்தை நாம் காணலாம், அந்தப் பெண் ஐரோப்பாவைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
ஹெல்முட் கோல் ஐரோப்பாவை ஒரு உலக வல்லரசாக இணைத்து, பழைய பாபிலோனின் வேர்களில் இருந்து ஒரு புதிய உலக சக்தி எழும் என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார்.
கருத்து 3. ஹெல்முட் கோல் மற்றும் அவரது வாரிசுகள் ஜெர்மனியை ஐரோப்பாவில் முன்னணி சக்தியாக நிறுவிய நிலையில், ஐரோப்பாவை உலகின் முன்னணி சக்தியாக நிலைநிறுத்த தீவிரமாக செயல்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவிக்கப்பட்ட அதே நாளில் இந்த நிகழ்வுகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் என்ன?
1982 அக்டோபர் 1, முதல், ஐரோப்பாவில் “புதிய பாபிலோன்” என்ற ஒரு புதிய உலக வல்லரசு உருவாகி வருகிறது. மேலும் என்ன நடக்கிறது என்பதை பெரும்பாலான மக்கள் அறியவில்லை.
அந்திக்கிறிஸ்துவைப் பற்றி என்ன?
ஹெல்முட் கோல் 2002 ம் வருடம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார், 2017 ம் ஆண்டு இறந்தார். அவர் உலகை வழிநடத்தும் கடைசி கால அந்திக்கிறிஸ்து அல்ல. ஆனால் தானியேல் 4 ம் அதிகாரத்தில் கணிக்கப்பட்ட சரியான நாளில் அவரது நியமனம் உலகின் கடைசி காலத்தின் தலைவர் எங்கிருந்து வருவார் என்பதைப் புரிந்துகொள்ள அனுமதிக்கிறது.
விரைவில் ஒரு மனிதன் ஐரோப்பாவில் அதிகாரத்திற்கு வருவார் என்றும், ஐரோப்பாவில் வளர்ந்து வரும் கடைசி கால பாபிலோனை ஆள்வார் என்றும் பரிசுத்த வேதாகமம் முன்னறிவிக்கிறது. ஹிட்லரைப் போலவே, இந்த மனிதன் ஜெர்மனிக்கு வெளியே பிறந்திருக்கலாம், ஆனால் இறுதியில் ஜெர்மனி, ஐரோப்பா மற்றும் முழு உலகத்தின் மீதும் கட்டுப்பாட்டைக் கொண்டு வருவார்.
எனவே, நாம் பரிசுத்த வேதாகமத்தையும் சரித்திர நிகழ்வுகளையும் நிதானித்துப் பார்க்கும்போது, இந்த முடிவுகள் சரியாக இருந்தால், உலகத் தலைவரும் கள்ளத் தீர்க்கதரிசியும் ஐரோப்பாவில் தோன்றுவதை அறிந்துகொள்ளலாம் .
கடைசி கால தீர்க்கதரிசனத்தைப் பற்றி மேலும் அறிய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் .
இந்த வீடியோ பலரைச் சென்றடைய உதவ, தயவு செய்து subscribe செய்யவும்.